Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 30 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரியாவின் சியோல் தலைநகர் Itaewon இல் இடம்பெற்ற “Hallloween” திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
குறித்த இளைஞர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றவர் அல்ல எனவும், கல்விக்காக வெளிநாடு சென்றவர் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வெளிநாட்டுத் தொடர்புப் பிரிவினர் உடனடியாக தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக உரிய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்திலிருந்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, உயிரிழந்தவர் அகதி வீசாவில் நாட்டில் தங்கியிருந்தவர் எனவும், காயமடைந்தவர்களில் மேற்கூறிய நபரைத் தவிர வேறு எவரும் இலங்கையர்கள் இருப்பதாக இதுவரை தகவல்கள் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago