Editorial / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலவான-வட்டரவ வீதி வம்பியகொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் கலவான அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை (26) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் கலவான குடுமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ரம்பதிகே தினுல பன்சிலு என்ற 17 வயதுடைய இளைஞர் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உறவினரும் தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெனிக் வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பி கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago