Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2024 ஜனவரி 31 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் புதன்கிழமை (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணியை கண்ணீர்ப்புகை குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்து பொலிஸார் கலைத்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர், கலஹா சந்திக்கு அருகில் பேராதனை வீதியினூடாக பிரவேசித்து கண்டி நோக்கிய ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தனர்.இதன்போதே பேரணியை வழிமறித்து கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
பேராதனை தாவரவியல் பூங்காவை கடந்த பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், பொலிஸ் வாகனங்களால் மறித்து, பேரணிக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
பேரணி தொடர்பில், பேராதனை பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
75 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்திய தொலைநோக்கு பார்வையற்ற நடவடிக்கைகளால் நாடு தற்போது அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலைக்கு மாறி பல்வேறு துறைகளிலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி ஏனைய மாணவர்களும் கல்வித்துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக ஒருபுறம் மக்கள் மீது வரிகளை சுமத்திக் கொண்டிருந்த அரசாங்கம் மறுபுறம் கருத்துக்களை வெளியிடும் உரிமையைக் கூட நசுக்கிக் கொண்டிருந்தது.
அதன் நீட்சியாகவே அரசு பல்கலைக்கழகங்களில் அடக்குமுறையை பல்வேறு வழிகளில் செயல்படுத்தி வந்தது. ஆனால், பெரும் கல்விச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது, அதாவது இலவசக் கல்வித் துறையே வீழ்ச்சியடைந்துள்ளது எனவே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பேராதனைப் பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தினால் இந்த எதிர்ப்புப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களின் கோரிக்கைகள்…
“வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாது”, “உணவுப் பொருட்களின் விலை உடனடியாக குறையும்”, உணவகங்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துதல்”, “குடியிருப்பு வசதிகள் மற்றும் புதிய விடுதிகள் கட்டுதல்”, “பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்”, “சமூக ஒடுக்குமுறைச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”, “அடக்குமுறையை நிறுத்துங்கள்”,“பல்கலைக் கழகங்களில் தன்னிச்சையாக வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உடனடியாக ரத்து செய்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
14 minute ago
17 minute ago