Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவில் ஆறு வீடுகள் நேற்று(07)தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அங்கிருந்து 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்ட்டுள்ளனர்.
வீடுகளில் பாரியளவில் வெடிப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாக ஐந்து குடும்பங்களை வெளியேறுமாறு தோட்ட நிர்வாகமும், கிராம சேவகரும் அறிவித்ததாக மக்கள் தெரிவித்தனர்.
வெளியேற்றப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கிராம சேவகரினால் வழங்கப்பட்டுள்ளன.
1926 ஆண்டு கட்டப்பட்ட இக்குடியிருப்புகள் இதுவரைக்காலம் எவ்வித புனரமைப்பும் இன்றி காணபப்டுவதனால் மழைக்காலங்களில் மக்கள் இவ்வாறு நிர்க்கதிக்குள்ளாகும் நிலை காணப்படுவதோடு, தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே இது குறித்து உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago