Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
இரண்டு வருடகால கல்லூரி பயிற்சியை நிறைவு செய்தும் இதுவரையிலும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் கவலை வெளியீட்டுள்ளனர்.
இதேவேளை, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் உள்ள உதவி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மத்திய மாகாணத்தில் உள்ள 31 உதவி ஆசிரியர்களுக்கு மாத்திரம் ஏன் இன்னும் நியமனம் வழங்கப்படவில்லையென உதவி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புயுள்ளனர்.
உதவி ஆசிரியர்களாகிய எமக்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ருபாய் சம்பளம் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் தற்பொழுது நாடு எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்க பட்டுள்ள நிலையில் தமது வாழ்க்கை செலவினை கொண்டு செல்வதில் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்
கலாசாலை கல்வியை ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இன்று வரை தாம் போராடி கொண்டிருந்தாலும் இதுவரையிலும் எமக்கு எவ்வித தீர்வும் கிட்டவில்லை. எமது நியமனத்தில் மாத்திரம் இழுபறியான நிலைமை காணப்படுகின்றது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வலையக் கல்வி பணிமனை, மாகாண கல்வி அமைச்சி வரை சென்று பலமுறை எமது முறைபாட்டினை பதிவு செய்த போதும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மலையக அரசியலில் வாதிகளும் மௌனம் காத்துவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் மத்திய மாகாணத்தில் உள்ள 31உதவி ஆசியர்கள் தமது நியமனம் தொடர்பில் தீர்வினை பெற்று தருமாறு கோரி கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாகவும் மத்திய மாகாண உதவி ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago