R.Maheshwary / 2021 நவம்பர் 11 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
கேகாலை மாவட்ட களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்களில், நிறுவனம் தொழில் சட்டங்களுக்கு முரணாக செயற்படுவது தொடர்பாக தனக்கு விரிவான அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு, அமைச்சர் நிமல் சிறபால டி.சில்வா அதிகாரிகளுக்கு உத்தரவு.
அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள தொழில் அமைச்சில், அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்த பொழுது, இந்த விடயம் குறித்து, தொழில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக கேகாலை மாவட்டத்தில் பனாவத்தை, அல்கொல்லை, லெவன் கனேபல்ல, வீஒயா, கிரிபோருவ, கௌனி தேவாலகந்த, கிதுல்கல, இங்ஒயா, உறுமிவல, எதிராபொல, கலுபான ஆகிய பெருந்தோட்ட பகுதிகளிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தொழில் புரிகின்ற தொழிலாளர்களுக்கு தொழில் சட்டங்களின்படி ஒன்றரை நாட்களுக்கான வேதனத்தை பெற்றுக் கொடுக்க மறுக்கின்றமை, தொழிற்சங்க சந்தாவை அறவிடுவதை இடை நிறுத்தியுள்ளமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்கூறப்பட்ட விடயங்கள், தொழில் சட்டங்களுக்கு முரணாக அமைந்துள்ளதாக தெரிவித்ததுடன், அவற்றை தொழில் சட்டங்களுக்கு அமைய திருத்துமாறு தொழில் ஆணையாளர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை கோரியிருந்தாலும், அது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து, தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளதுடன்.இந்த விடயம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளையும் களனிவெலி நிறுவனத்தின் அதிகாரிகளையும் அழைத்து, சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டு, உடனடியாக தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்திக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago