2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

குளவி கொட்டியதில் பெண் தொழிலாளி மரணம்

Editorial   / 2026 ஜனவரி 12 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலை கொழுந்துகளைப் பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளியான பெண் ஒருவர் திங்கட்கிழமை (12) மதியம் குளவிகள் கலைந்து கொட்டியதில்   சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் நானுஓயா பொலிஸ் பிரிவில் உள்ள கிரிமெட்டிய தோட்டத்தில் வசித்து வந்த இரண்டு குழந்தைகளின் தாயான சடயன் லெச்சுமி (78) ஆவார்.

தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளைப் பறித்துக் கொண்டிருந்தபோது, ​​  மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை பெரிய பறவையொன்று தாக்கியது. இதனால் பதற்றமடைந்த குளவிகள்  தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை கொட்டின.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .