Janu / 2026 மே 20 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை, பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து புதன்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாமஸ்டன், ரட்ணகிரிய தோட்டத்திலிருந்து தேயிலைக் கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால் லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த லிந்துலை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பி. கேதீஸ்

25 minute ago
40 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago
59 minute ago