Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 14 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நாட்டின் தற்போதைய நிலையில், பெருந்தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் கால்நடை வளர்ப்பை கைவிட வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கால்நடை வளர்ப்பாளர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க எவரும் முன்வராமை, பசுப் பாலுக்கான உரிய விலை வழங்கப்படாமை உள்ளிட்ட பல காரணங்களால், பெருந்தோட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய அளவில் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளனர்.
கால்நடைகளுக்கான பிரதான தீவனமான புண்ணாக்கு ஒரு மூடை 6,500 ரூபாய் வரை கடைகளில் விற்கப்படும் நிலையில், தம்மிடமிருந்து ஒரு லீற்றர் பால் 100 அல்லது 105 ரூபாய்க்கே கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் அதிகமானவர்கள் தாம் வளர்ந்து வந்த கால்நடைகளை விற்று, கால்நடை வளர்ப்பைக் கைவிட்டுள்ளதால் பெருந்தோட்டங்களில் பாலுக்கு தட்டுபாடு நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
7 minute ago
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 hours ago
15 Aug 2025