2026 மே 09, சனிக்கிழமை

காசல்ரீ வீதியில் புதிய கடைத்தொகுதி அமைக்க மதிப்பாய்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

காசல்ரீ கடைவீதியில், புதிய கடைத்தொகுதிகளை அமைத்தல் தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கை, இன்று (22) முன்னெடுக்கப்பட்டது.

நோர்வூட்  பிரதேசபையின் மாதாந்த சபையமர்வில், சபை உறுப்பினர் ராம், காசல்ரியில் புதிய கடைத்தொகுதியை அமைத்தல் தொடர்பாக, பிரேரணையொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

இந்தப் பிரேரணை, சபை தவிசாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.

நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேலுவின் பணிப்புரைக்கமைய, நோர்வூட் பிரதேச சபை மதிப்பாய்வு அதிகாரிகளால், நேற்று மதிப்பாய்வு செய்யப்பட்டது.

காசல்ரீ நீர்தேக்கம் அமைக்கப்பட்டதால், சமூத்திரவள்ளி எனும் காசல்ரீ நகரம், நீரில் மூழ்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமர்வில் வட்டார உறுப்பினர்களான ராம்.காமராஜ், அருள்ஞானம் ஆகியோரும், இந்தப் பகுதிக்குச் சமூகமளித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .