R.Maheshwary / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
காசல்றி மற்றும் பொகவந்தலாவை பகுதிகளில் காட்டுத்தீயால் சுமார் 15 ஏக்கர் மானா புற்காடு எரிந்து சாம்பலாகியுள்ளது.
மலையகத்ததில் தொடரும் வரட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச்செயல் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, காசல்றி நீர்தேக்க கரையோரத்தை ஒட்டியதான வனராஜா பகுதியிலே நேற்று மாலை விசமிகளினால் தீ வைக்கப்பட்டது. இதனால் குடிநீர் விநியோக குழாய்கள் எரிந்து நாசமாகியதால் வனராஜா பகுதி குடியிருப்பாளர்கள் குடி நீரின்றி பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை பொகவந்தலாவை பிரதேசத்திலும் தீ பரவலினால் பல ஏக்கர் காடு எரிந்தது. தொடர்ந்து இவ்வாறு தீ வைக்கும் செயல் இடம்பெற்று வருதால் நீரேந்தும் பகுதிகளில் நீர் வற்றி காணப்படுகின்றது.
மேலும் காசல்றி, நோட்டன் ,மேல்கொத்மலை, கெனியன் ஆகிய நீர்தேக்ககளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
13 minute ago
14 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
14 minute ago
15 minute ago