Editorial / 2024 ஜூன் 13 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் பெட்டியொன்று தடம் புரண்டதால் மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாலை 3.40 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பயணிகள் புகையிரதத்தின் காட்சிப் பெட்டி தடம்புரண்டதால் மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வட்டகொட மற்றும் தலவாக்கலை நிலையங்களுக்கு இடையில் 118வது மைல் கம்பத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளதாகவும், தடம் புரண்ட ரயிலில் காட்சி பெட்டியை அகற்றி மற்றைய பெட்டிகளுடன் கொழும்பு கோட்டை வரை ரயிலை இயக்குவதற்கு ரயில் கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.










2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025