2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காட்டில் தீவைத்த 16 மாணவர்கள் கைது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                                 

பதுளை – எல்ல பிரதேசத்தின் 'ரொக்' என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீவைத்தமை தொடர்பில், 16 மாணவர்களை எல்ல பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று  (26) மாலை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை  பகுதியிலுள்ள  பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பதுளையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போதே, வனத்துக்கு தீ வைத்துள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X