Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
வட்டவளை, மேல் வட்டவளை பிரதேசத்திலுள்ள பைனஸ் வனப் பகுதியில், நேற்று (17) மாலை ஏற்பட்ட காட்டுத் தீயால், சுமார் 20 ஏக்கர் வனப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக, ஹட்டன் வன இலக்கா அதிகாரி தெரிவித்தார்.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, பாரிய சிரமங்களை எதிர்கொண்டதாகவும் இரவு 8.30 மணியளவிலேயே, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் வன இலாக்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்காடுகளை அண்மித்து வாழ்ந்து வரும் மக்கள், காட்டுத் தீ தொடர்பில், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் காடுகளுக்கு அருகில் தீமூட்டல், குப்பைகளை எரியூட்டல், தீமூட்டக்கூடிய பொருட்களைக் காடுகளுக்கு கொண்டுசெல்லல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினர்.
39 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago