2025 மே 12, திங்கட்கிழமை

காட்டு யானையை சுட்டு கொன்றவர் கைது

Janu   / 2023 ஜூலை 12 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அளுத்வெவ கிளிபுன்ன பகுதியில் வயல்வெளியில் காட்டு யானையை வெடி வைத்து கொன்று குறித்த காட்டு யானையை வயல் வெளியில் புதைத்த குற்றச்சாட்டில்  வனஜீவராசி அதிகாரிகளினால் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபரிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வனஜீவராசி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வனஜீவராசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரை வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வன ஜீவராசிகள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராமு தனராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X