2025 ஜூலை 24, வியாழக்கிழமை

காணாமல்போன பிள்ளையார் சிலை மீட்பு; சந்தேக நபர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, மு.இராமச்சந்திரன், எஸ்.கேதிஸ்

 

தலவாக்கலை பெரிய மல்லியப்பு  தோட்ட ஆலயத்தில் காணாமல் போன பிள்ளையார் சிலையை மீட்டுள்ள தலவாக்கலை பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக   தெரிவித்தனர்

குறித்த வழிப்பிள்ளையார் ஆலத்தின் கதவு, கடந்த 31 ஆம் திகதி உடைக்கப்பட்டிருந்ததுடன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையும் திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் தலவாக்கலை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சீ.சீ.டி.வியின் உதவியுடன் கமராவை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் பிள்ளையார் சிலையை தன்னிடம் விற்க முற்பட்டதாக, தலவாக்கலை  நகரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர்,  பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தகவலையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவியின் உதவியுடன் சந்தேக நபரை கைதுசெய்துள்ள பொலிஸார், பிள்ளையார் சிலையையும் மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .