2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Nirosh   / 2021 ஜனவரி 16 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் ஆற்றுப்பகுதியிலேயே பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று (16) காலை  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்ட ஸ்ரீபாத பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய சிதம்பரம் ருக்மணி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 9ஆம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X