2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

காயமடைந்த கடல் கழுகு மீட்பு

Editorial   / 2023 நவம்பர் 14 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயமடைந்த கடல் கழுகு ஒன்று  ஹட்டன், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் உள்ள தீவு ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடல் கழுகு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  காசல்ரீ நீர்த்தேக்கத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஊழியர் ஒருவரே அந்த கடல் கழுகை பிடித்து, செவ்வாய்க்கிழமை (14) ஒப்படைத்துள்ளார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தை சுற்றி வாழும் கடல் கழுகுகள் மீது காகங்கள் தாக்கியதால், கடல் கழுகு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பறக்க முடியாமல், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் உள்ள தீவில்   படுத்திருந்துள்ளது.   

அதனையடுத்து ஹோட்டல் ஊழியர் திங்கட்கிழமை (13) மதியம் படகில்   கடல் கழுகை மீட்டு காயங்களுக்குள்ளான கடல் கழுகை    ஹட்டன் பொலிஸாரின் ஊடாக  வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் ஹட்டன் பொலிஸாருக்கு வந்து காயமடைந்த கடல் கழுகை ஹட்டன் பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்று, ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X