Janu / 2023 ஜூலை 09 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை ஹெம்மாதகம பிரதான வீதியின் அம்புலுவாவ 3 ஆம் கட்டை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி செங்குத்தான சரிவில் விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்து ஹெம்மாதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பமே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், காரில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு சிறு பிள்ளைகள் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை உலப்பனை பிரதேசத்தை சேர்ந்த குறித்த குழுவினர் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நேற்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது ஹெம்மாதகம பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் வீதியில் கம்பளை நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். கிராம மக்களுடன் இணைந்து காரில் பயனித்தோரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago