Kogilavani / 2021 ஜனவரி 24 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
'பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் கபில நாகன்தலவில் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வெளியிட்ட கருத்துக்கு இதன்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
'இந்த அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகின்றது. அரசியல்வாதிகளுக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் இல்லை. இவற்றைக் கண்டிக்கின்றோம்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துரைத்தனர்.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago