2025 மே 05, திங்கட்கிழமை

கினிகத்தேனையில் மூவர் கடத்தல்

Editorial   / 2024 ஜூலை 12 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

கினிகத்தேனை, கெனில்வொர்த் பிரதேசத்திலுள்ள பழைய ஆலயமொன்றுக்கு அருகில் புதையல்களை அகழ்வதற்கு வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், கினிகத்தேனை பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டனர்.

    சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவொன்று தங்கியிருப்பதாக 119 அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கினிகத்தேன பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்துக்குச் சென்றுள்ளது.  

அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸார்,   ஒருவரைப் பிடித்து நடத்திய விசாரணையில், பூஜை நிமித்தம் இந்த இடத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அங்கு வந்த சிலர், அக்குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

இந்த குழுவைச் சேர்ந்த ஏனையவர்களிடம் விசாரணை நடத்தியதில்,   04 டெட்டனேட்டர் வயர்கள், 250 கிராம் வெடி மருந்து , கல் உடைக்கும் கருவிகள், கம்பி வடங்கள் மற்றும் பூஜை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

 இந்தக் குழுவுடன் மற்றுமொரு குழுவினர் வந்துள்ளதாகவும், அந்தக் குழு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்ததையடுத்து, ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர்  நிபுண தெஹிகமவின் ஆலோசனையின் பேரில், கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X