2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கினிகத்தேன விபத்தில் அறுவர் காயம்

Editorial   / 2024 நவம்பர் 19 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

எச்.எம்.ஹேவா

ஹட்டன்-கண்டி வீதியில் கினிகத்தேன பிரதேசத்தில் இடம்பெற்ற  விபத்தில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  18ஆம் திகதி மாலை 5 மணியளவில் கினிகத்தேனவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நாவலப்பிட்டியிலிருந்து கிங்கத்தேனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

  முச்சக்கரவண்டி, கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த போது, ​​வேனை முந்திச் செல்லும் போது நாவலப்பிட்டியிலிருந்து கிங்கத்தேனை நோக்கி பயணித்த  பஸ்ஸுடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் மூன்று பாடசாலை மாணவர்கள் இருந்ததாகவும், மூன்று மாணவர்கள், முச்சக்கரவண்டியின் சாரதி, பேருந்தின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X