2025 மே 19, திங்கட்கிழமை

கிராமத்துக்குள் முடங்கியுள்ள மக்கள்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஆராச்சி

பாலமொன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் புளத்கொஹுபிட்டிய - பெலம்பிட்டிய  கிராம மக்கள் பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பெலம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள  பெலம்பிட்டிய கிராமத்தவர்கள் பிரதான போக்குவரத்து மார்க்கமாக பயன்படுத்தி வந்த பாலமானது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 14 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருள்கள் பிரதேச செயலக அதிகாரிகளால் கடும் சிரமத்துக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X