Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 21 , மு.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக்க
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர் ஒருவரை, நேற்று முன்தினம் (19) பார்வையிட வந்த கிராம சேவகர் ஒருவரின் சுமார் இரண்டு லட்சத்து 90,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
மொனராகலை வைத்தியசாலைக்கு முன்பாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவைத்துவிட்டு, நோயாளியை பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குள் சென்றுள்ளார்.
இதன்போதே, இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான அதமலே, கொட்டியாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயது நபர், மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
மொனராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .