Kogilavani / 2021 மே 24 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கென பிசிஆர் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு, சுகாதார அமைச்சு முன்வர வேண்டும் என்று, நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் வீ.குணரட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், பொகவந்தலாவை, நோர்வூட் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடுகின்றது என்றும் அன்றாடம் புதியத் தொற்றாளர்கள் இணங்காணப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
கிளங்கன் வைத்தியசாலையை நம்பி பெரும்பாலான தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் வாழுகின்றனர் என்றும் எனவே இந்த வைத்தியசாலைக்கென பிசிஆர் இயந்திரம் ஒன்று இல்லாதிருப்பது கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சகல வசதிகளுடன் இந்த வைத்தியசாலை திறக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றியே இந்த வைத்தியசாலை செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago