Kogilavani / 2021 மே 16 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்த உதய. அருண எஸ்.ஹேரத்
இரத்தினபுரி லேல்லோப்பிட்டிய பகுதிக்கு உட்பட்ட மாகஸ்வத்த மற்றும் பொல்கஸ்தென்ன ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், குடிநீருக்காகப் பயன்படுத்தும் இந்தொல குளத்தில் கசிப்புக் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்திய கோடாவைக் கழந்ததால், 24 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள், பெண்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி இரவு, மேற்படி இரு கிராமங்களையும் சேர்ந்த மக்கள் வழமைபோன்று குடிநீரைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் இதனையடுத்து வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்ட நிலையில், மேற்படி 32 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குடிநீரில் கோடா கலந்தமை உறுதிபடுத்தியதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளனர்.
மாகஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
8 minute ago
28 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
47 minute ago
2 hours ago