2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

குடும்பத்தையே வெட்டிச் சாய்த்த சந்தேகநபரின் வீட்டிற்கு தீ

Freelancer   / 2022 நவம்பர் 16 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை - உக்குவெல பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் வீட்டுக்குள் புகுந்த சில நபர்கள் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுக்கு தீ வைத்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று வயது குழந்தை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .