Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 23 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
வெலிமடை பகுதியிலிருந்து கொழும்புக்கு உருளைக்கிழங்குகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை கடவளை பகுதியில் வைத்து, இன்று காலை குறித்த கனரக வாகனம் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், உதவியாளர் படுங்காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் இருந்த உருளைக்கிழங்கு வகைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025