Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கொடை மேற்பிரிவு தோட்டத்தில் சேரும் குப்பைகளால், டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டத்தில் குப்பைகளை இடுவதற்கு முறையான இடம் கிடையாது. அதேபோல சேரும் குப்பைகளை அப்புறப்படுத்த தோட்ட நிர்வாகமும் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்காத நிலையில், குப்பைகள் நிறைந்து, பிரதேசத்தில் துர்மணம் வீசுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் சீரற்ற காலநிலையால், குறித்த குப்பைகளில் நீர் நிரம்பியுள்ளதால், டெங்கு பரவும்
அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
எனவே, இந்தக் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு தோட்ட நிர்வாகம் அல்லது கொட்டக்கலை பிரதேச சபை முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், வாராந்தம் குப்பைகளை அகற்றுவதற்கும் முறையாக குப்பைகளைப் போடுவதற்கான குப்பைக்குழிகளை அமைத்து தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .