2026 மே 09, சனிக்கிழமை

குப்பை சேகரிக்கும் நிலையத்தால் பயணிகளுக்கும் மக்களுக்கும் சிரமம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.எம்.ஹசனார்

எல்ல நகரின் நுழைவாயிலில் ​அமைந்துள்ள குப்பை சேகரிக்கும் நிலையம் காரணமாக, பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் பிரதேச மக்களும் சுற்றுலாப்பயணிகளும், பாரிய அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருவதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிகளவான உல்லாசப் பயணிகள் வருகை தரும் எல்ல நகரின், பண்டாரவளை - வெல்லவாய வீதிக்கு அருகில், குப்பைச் சேகரிக்கும் நிலையம் அமைந்துள்ளது.

பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளும் நகரிலுள்ள 200க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளும், இந்த இடத்திலேயே கொட்டப்படுகின்றன.

எனவே, இந்தக் குப்பை சேகரிக்கும் நிலைய​த்தை,​ வேறொரு இடத்துக்கு,  அதாவது, குடியிறுப்புகள் இல்லாத இடத்துக்கு மாற்றுமாறு, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .