Editorial / 2020 மார்ச் 22 , பி.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்


பண்டாரவளை, எல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பை மலையில் ஏற்பட்டுள்ள தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள, குறித்த குப்பை மேட்டில் நேற்றிரவு (21) 11.30 மணியளவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீப்பரவல் வேகமாகப் பரவ ஆரம்பித்தது.
இது தொடர்பில் எல்ல பிரதேச சபைத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் ஊடாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
சுமார் மூன்று மணிநேரம் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ 90 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டு வேகமாகப் பரவிவருகின்றது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளிக்கின்றது.
எல்ல பிரதேச சபையில் தீயணைப்பு வாகனம் இன்மையால், இன்று (22) பண்டாரவளை மற்றும் பதுளையில் இருந்து வாகனம் வரவழைக்கப்பட்டது.
பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பற்ற நிலையிலேயே இக்குப்பை மேடு காணப்பட்டுள்ளதுடன், உக்காத பொருள்களும் அதிகளவு இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago