Kogilavani / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், பி.சிவா
கெட்டபுலா குயின்ஸ்பரி தோட்டத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க நவநாதர் சித்தர் கோவிலில், தைபொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இரவு நேர பூஜை, இம்முறை நடைபெறாது என்று அறிவித்துள்ள கோவில் நிர்வாக சபை உறுப்பினர் வீ.ஜெயராஜ், பகல் வேளைகளில் வழமையான பூஜைகள் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளார்.
சித்தர் சமாதி அமைக்கப்பட்டுள்ள சிவாலயத்தில், தைப்பொங்கல் தினத்தன்று, சிறப்புமிக்க பூஜைகள், கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வருவது வழமை.
இப்பூஜை வழிபாடுகளில் ஒன்றான சித்தர் குகையில் இடம்பெறும் வன போஜன பூஜை சிறப்பு மிக்க ஒன்றாகும். இப் பூஜையில் பங்கேற்பதற்காக, நாட்டிலுள்ள சகல பாகங்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்த அடியார்கள் வந்து செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, இப்பூஜை வழிபாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
தைபொங்கல் தின பகல் நேர சிறப்புப் பூஜைகளில், குயின்ஸ்பரி தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் வெளியாருக்கு அனுமதியில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago