R.Maheshwary / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த், ரஞ்சித் ராஜபக்ஸ
மலையகத்தின் இருவேறு இடங்களில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
புஸல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொச்சைல்ட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய போதே, அவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 53 வயதுடைய எஸ். ராஜேந்திரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நோர்ட்டன் பகுதியிலும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, 67 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் நோர்ட்டன்- டெப்லோ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .