Freelancer / 2023 மே 24 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.பிரபா
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட என்பீல்ட் தோட்டத்தின் பார்கெந்தல் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பேர் தொடர்ந்தும் டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பார்கெந்தல் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறிந்துக் கொண்டிருந்த 9 ஆண்களும் 2 பெண்களும் இதில் பாதிக்கப்பட்டதுடன், பாதையில் சென்றுக் கொண்டிருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் 12 பேரும் உடனடியாக டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இவர்களில் 3 பெண்களும் ஆண்ணொருவரும்சிகிச்சையின் பின்னர் நேற்று (23) மாலை வீடு திரும்பிய நிலையில் 7 பெண்களும் ஆண்ணொருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக ஆதார வைத்தியாசாலை கடமை நேர வைத்தியர் தெரிவித்தார்.
இந்த 8 பேரின் நிலை ஆபத்தானதாக இல்லை என்றும் அவர்கள் இன்று அல்லது நாளை வீடு திரும்ப கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். R
18 minute ago
41 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
41 minute ago
46 minute ago
56 minute ago