2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

குளவி கொட்டில் 15 தொழிலாளர்கள் பாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

 

பொகவந்தலாவ - கொட்டியாகலை மேற்பிரிவு தோட்டம், 3 இலக்க தேயிலை மலையில், கொழுந்து பறித்து கொண்டிருந்த 15 தொழிலாளர்கள், குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இச்சம்பவம், இன்று (18)  முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரத்தில் கூடுகட்டியிருந்த குளவிகள், காற்று விசியதன் காரணமாக கலைந்து வந்து, தொழிலாளர்களை தாக்கியுள்ளன என்றும் அதில் பெண் தொழிலாளர்கள் 13 பேரும் ஆண்கள் 02 பேரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .