Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 03 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பொகவந்தலாவை மேல் பிரிவு தோட்டபகுதியில் உள்ள, வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (1) மாலை இந்தச் சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நால்வரும் விறகு சேகரிக்கச் சென்ற போது, மரத்தில் இருந்த குளவிக் கூட்டினை கழுகு மோதியமையினால், குளவிகள் கலைந்து தாக்கியுள்ளன.
இதனையடுத்து நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்..
பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 50வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் என்பவரே உயர்ழ்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .