Freelancer / 2024 பெப்ரவரி 12 , பி.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள பொரஸ் பிரிவில் தனியார் வகுப்பு சென்ற மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயதுடைய மாணவ மாணவிகள் இன்று மாலை 6 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் 3 ஆண் மாணவர்கள் 9 பெண் மாணவியர்கள் எனவும் அனைவரும் 13 வயதுடையவர்கள் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். R
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago