Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆ.ரமேஸ் / 2017 ஜூலை 29 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது ஒரு வயது பெண் குழத்தை மற்றும் 3 வயது ஆண் குழத்தைகளை வீட்டுக்குள் வைத்தப் பூட்டி விட்டு, கூலி வேலைக்குச் சென்ற தாய் ஒருவர், நுவரெலியா பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.
நுவரெலியா, ஒலிபண்ட் தோட்டத்தின் மத்திய பிரிவில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி டி.எம்.தென்னகோன் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒலிபண்ட் தோட்ட மத்திய பிரிவில் சடையண் வசந்த கோகிலா என்ற 23 வயதான தாய்க்கு நா.நிதிஸ்கா (வயது 1), நா.கோகுல்ராஜ் (வயது 3), நா. தனுஸ்கரன் (வயது 6) என்ற 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.
“சிறுவயதில் காதலித்து திருமணம் முடித்த இந்தத் தாயும் அவரது கணவரும், ஒலிபண்ட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
“கடந்த 2 வருடங்களாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளின் போது, தன்னைக் கொலை செய்யும் அளவுக்கு கணவரான எஸ்.நாகராஜ் (வயது 35) தாக்கியதன் காரணமாக, அவரிடமிருந்து விவாகரத்து மற்றும் ஜீவனோபாயம் கேட்டு, குறித்த தாய், நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
“இந்த வழக்கு விசாரணை காலப்பகுதியில் நீதிமன்றத்துக்கு முறையாக ஆஜராகாத காரணத்தால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவரைக் கைதுசெய்த பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின் கடந்த 2 மாதங்களாக இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
“தனது பிள்ளைகளுடன் தனிமையில் வாழும் இந்தத் தாயின் அப்பாவுடைய தங்கையின் பொறுப்பில் பிள்ளைகளை விட்டுவிட்டு, தினமும் காலை 8 மணிக்கு கூலி தொழிலுக்காக சாந்திபுரம் எனும் கிராமத்துக்குச் சென்று மாலை 5 மணிக்கு அவர் வீடு திரும்புவாராம்.
“ஆனால், கடந்த ஒரு வார காலமாக இத்தாயின் அத்தை கொழும்புக்கு சென்றதையடுத்து பிள்ளைகளை அரவணைக்க ஒருவரும் இல்லாமல் போய்யுள்ளனர்.
“குடும்பத்தின் நாளாந்த வருமானத்தை கருத்திற்கொண்டு இந்த தாய், கடந்த வெள்ளிக்கிழமை தனது மூத்த மகனை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு, மற்றைய இரு குழந்தைகளையும் வீட்டில் அடைத்துவிட்டு வழமையான தொழிலுக்குச் சென்றுள்ளார்.
“வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகள் நீண்ட நேரமாக தாயைத் தேடி அழுது தேம்பிய நிலையில், அயலில் உள்ளவர்கள் தோட்ட குடும்ப நல அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.
“குடும்ப நல அதிகாரி, வீட்டின் கதவை உடைத்து, குழந்தைகளை மீட்டுள்ளார்.
இதனையடுத்து, நுவரெலியா ஒலிபண்ட் சாந்திபுரம் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள "பிரஜா பொலிஸ்" நடமாடும் எமது பொலிஸ் சேவையின் கவனத்துக்கு இவ்விடயம் கொண்டு வந்தனர்” என்றார்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையை விசாரித்து, தாயை விசாரணைக்கு வரும்படி பணித்துள்ளனர்.
இதற்கமைய, சாந்திபுரம் "பிஜா பொலிஸ்" நிலையத்தில் குறித்த தாயிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற விசாரணையில் தாயின் நிலைமை தொடர்பில் கேட்டறியப்பட்டது.
இருந்தும் தோட்டத்தின் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் பிள்ளைகளை விட்டு சென்றிருக்கலாம் தானே எனக் கேட்ட பொழுது தோட்டத்தில் தொழில் செய்யாத தொழிலாளிகளின் பிள்ளைகளை பிள்ளை மடுவ பொறுப்பதிகாரி ஏற்க மாட்டார் எனச் சொல்லி அழுதுள்ளார்.
அதேவேளையில், தாய்யின் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, எச்சரிக்கை விடுத்ததுடன், பிள்ளைகளை தோட்ட பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து விசாரணையிலிருந்து தாயை விடுவித்தார்.
33 minute ago
37 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
37 minute ago
6 hours ago