2026 மே 01, வெள்ளிக்கிழமை

குழந்தையை காணவில்லை

கு. புஷ்பராஜ்   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட லோவகிரன்லி தோட்டத்தில், 2 வயதும் 6 மாதங்களான குழந்தையொன்று காணாமல் போயுள்ளது என, அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

நேற்று முன்தினம் (25) மாலை 3 மணியளவில், குறித்த ஆண்குழந்தை, வீட்டிலிருந்து விளையாடுவதற்காக வெளியே சென்றதாகவும் அதன்பின்னர், குழந்தையைத் தேடிப்பார்க்கும் போது, குழந்தை காணாமல் போயிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குழந்தையைத் தேடும் பணியை, அக்கரபத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குழந்தை தொடர்பான தகவல்கள் தெரியவருமானால், 0512230222 என்ற அக்கரபத்தனை பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தித் தெரியப்படுத்துமாறு, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .