Kogilavani / 2017 ஜூலை 10 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.சுஜிதா
நுவரெலியா, ஒலிபண்ட் தோட்டத்தில் இரு குழுக்கிடையில், நேற்று மாலை ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த மூவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலிபண்ட் கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது, முச்சக்கர வண்டியை பழுதுபார்ப்பதற்காக, அத்தோட்டத்திலுள்ள வாகனம் திருத்தும் நிலையத்தின் உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.
முச்சக்கர வண்டியை பழுதுபார்த்துக்கொடுக்காது, வாகனம் திருத்தும் நிலையத்தின் உரிமையாள காலம்தாழ்த்தி வந்துள்ளார். ஆத்திரமடைந்த முச்சக்கர வண்டியின் உரிமையாளர், தனது சகாக்களுடன் அங்கு சென்று, வாகனம் திருத்தும் நிலையத்தின் உரிமையாளருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிபோய் கைகலப்பில் முடிந்துள்ளது. சம்பவத்தில், வாகனம் திருத்தும் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களே படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago