Kogilavani / 2021 மார்ச் 03 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்தில் அனைத்து கூட்டுறவுத்துறை சேவையாளர்களுக்கும் 25 சதவீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
குருவிட்ட பல்நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், சப்ரகமுவ மாகாணத்தில் அனைத்து கூட்டுறவுத்துறை சேவையாளர்களுக்கும் 25 சதவீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் கொடுப்பனவும் 50 சதவீதம் தொடக்கம் 100 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
'கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்நோக்குக் கூட்டுறவுத்துறை பாரிய சேவையை செய்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் 23 பல்நோக்குக் கூட்டுறவு சங்கங்கள் உள்ளதுடன் சணச, கிராமிய வங்கி, காணி, நிதி என 700 கூட்டுறவு விற்பணை நிலையங்களும் உள்ளன. இவற்றில் 2,000 பேர் சேவையாற்றுவதோடு அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றது' என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago