2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் பலி

Kogilavani   / 2017 ஜூலை 05 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலஹா பொலிஸ் பிரிவு, தெல்தொட்டை கபடா பிரதேசத்தில்,  இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், தெல்தொட்டையைச்  சேர்ந்த சந்திரசேன வலகெதர (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த நபர்,  தெல்தொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக,  கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும்போது, வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம்,  கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இரு பிரிவினருக்கும் இடையில் ஏற்பட்ட சொத்து பிரச்சினையே, இச்சம்பவத்துக்கு காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .