2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கெப் வாகனத்தில் ஓட்டோ மோதியதால் ஐவர் காயமடைந்தனர்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வெல்லவாய – தனமல்வில வீதியின் ஹந்தபனகல சந்திக்கு அருகில் நேற்று (15) கெப் ஒன்றின் பின்பகுதியில் ஓட்டோ ஒன்று மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தற்போது மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஓட்டோவின் சாரதியும் ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனமல்விலவில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த கெப் வண்டி, ஹந்தபனகல சந்திக்கு அருகில் மஞ்சள் கோட்டில் வீதியை கடந்த நபருக்காக நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த ஓட்டோவானது, கெப் வண்டியின் பின்பகுதியில் மோதி கவிழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெல்லவாய பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X