R.Maheshwary / 2022 ஜூலை 06 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
இம்முறை கேகாலை மாவட்டத்தில் டூரியன் பழ உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை, கித்துல்கல, தெரணியகல உள்ளிட்ட பிரதேசங்களில் டூரியன் பழம் அதிகம் விளைவதுடன், இம்முறை பழங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் தாக்கம் காரணமாக அதிக வருமானம் கிடைக்கவில்லை என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கேகாலை மாவட்ட விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின் பழ உற்பத்திக்கு பொறுப்பான அதிகாரி காஞ்சன ஹுருக்கமுவ தெரிவிக்கையில், phytophthora palmivora என்ற பங்கசு மூலம் இந்த நோய் பரவுவதாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தடுப்பதற்காக mancozeb எனப்படும் இரசாயனப் பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
ஆனால் டூரியன் பழ மரங்கள் அதிக உயரமாக வளர்வதால் குறித்த இரசாயனப் பொருளைப் பயன்படுத்துவது கடினமாது. ஒரு மரத்துக்கும் மாத்திரம் இந்த திரவத்தை தெளித்து இந்த பங்கசு நோயை பரவுவதைத் தடுக்க முடியாது. எனவே அனைத்து மரங்களுக்கும் இத்திரவத்தை தெளிக்க வேண்டும் அத்துடன் தற்போது இந்த திரவத்தைப் பெற்றுக்கொள்வதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த டூரியன் பழ மரங்களுக்கு சூரிய வெளிச்சம் கிடைப்பது மிகவும் குறைவு. எனவே சூரிய வெளிச்சம் இந்த மரங்களுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை திட்டமிடுவதன் ஊடாக இந்த நோயை கட்டுப்படுத்தவோ பரவுவதைக் குறைக்கவோ முடியும் என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago