Editorial / 2019 ஒக்டோபர் 18 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாநகர சபையால், நுவரெலியா பிரதேச சபைக்கு உரித்தான நானுஓயா பிரதான நகரிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள கேபிள் கார் திட்டத்துக்கு, நுவரெலியா பிரதேச சபையின் அனுமதியை, கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இவ்விடயத்தை நுவரெலியா பிரதேச சபையின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாக, சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
இந்தக் கேபிள் கார் திட்டம் தொடர்பாக, பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தவிசாளரிடம், நேற்று (17) வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தக் கடிதம், செவ்வாய்க்கிழமை (15) கிடைத்தது என்று தெரிவித்த அவர், நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், சட்டரீதியாகவும் முறையாகவும் இடம்பெறுவதில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சரியான முறையில் நடந்துகொள்வதை, பிரதேச சபை வரவேற்பதாகக் கூறினார்.
அதேபோன்றே, பாரிய திட்டம் முன்னெடுக்கப்படும்போது, சிக்கல் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது என்று கூறிய அவர், கேபிள்கார் அபிவிருத்தி செயற்றிட்டத்தில், நுவரெலியா மாநகர சபை, நுவரெலியா பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாது, தவறிழைத்து விட்டது என்றும் கூறினார்.
நுவரெலியா மாநகர சபை, இத்திட்டத்தினூடாக, தன்னிச்சையாக வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனினும், நுவரெலியா பிரதேச சபையின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே, இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை, நுவரெலியா மாநகர சபை மறந்து, பிரதேச சபையைப் புறக்கணித்துள்ளது என்றும் கூறினார்.
நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பமாகும் இத்திட்டத்துக்கு, இதுவரை அனுமதி பெறவில்லை என்றும் இதனால், நானுஓயா பிரதேச வாகன சாரதிகள் பாதிக்கப்படுவாக, பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago