Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் 1931 ஆம் ஆண்டிலிருந்து வழிபாடு செய்யப்பட்டு வந்த மரத்தடி இந்து கோவில் கொடிக்கம்பம் வனவிலங்கு திணைக்களத்தினரால் உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
இதுதொடர்பில், அத்தோட்ட மக்கள், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
பொலிஸ் அதிகாரி,அரச அதிகாரி மற்றும் இந்துக்கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி செந்தில் தொண்டமான் தலையிட்டதால் ஒரு மணி நேரத்துக்குள் கோவில் கொடிக்கம்பம் மீண்டும் நாட்டப்பட்டது.
எல்ல ஊவா கிரீன்லாந்து தோட்டத்தில் அமைந்துள்ள சின்ன சிவனொளிபாத மலைத்தொடரில் Ella Adamspi 100 வருடங்களுக்கு மேல் பழமையான சென்டாக் கட்டி முருகன் ஆலயம் எல்ல பிரதேசசபை அதிகாரிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளது என பிரதேச மக்களினால் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 19.10.2022 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளது
பல உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்த பிரதேசமாக சிவனொளிபாத மலை Ella Adams pick காணப்படுகின்றது.
இந்த மலைத் தொடரில் அமையப் பெற்றிருந்த செந்தட்டி முருகன் ஆலயம் 18.10.2022 மாலை சேதப் படுத்தப் பட்டிருக்கும் செயற்பாடானது பிரதேச மக்களை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த ஆலயம் சேதப்படுத்தியது தொடர்பில் பிரதேச மக்களினால் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சேதம் ஆக்கப்பட்டிருக்கும் முருகன் ஆலயம் தொடர்பில் பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில்இ
இப்பிரதேசத்தில் வாழ்ந்த முன்னோர்களினால் முருகன் ஆலயம் நூறு வருடங்களுக்கு முன்பு வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன..
1933 ஆம் ஆண்டு முருக திருவுருவ சிலை சிலையுடன் கூடிய ஆலயம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் சிலை சேதமாக்கப்பட்டு ஆலய மாத்திரமே காணப்பட்டது. இருப்பினும் வருடத்துக்கு ஒருமுறை பிரதேச மக்களினால் வழிபாடுகள் நடத்தப்படும். எனினும்,கடந்த காலங்களில் ஆலயம் படிப்படியாக சேதமாக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் பிரதேச மக்கள் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவித்து வந்த சந்தர்ப்பத்தில் திடீரென எல்ல பிரதேசசபை அதிகாரிகளினால் ஆலயத்தின் கொடிக்கம்பம் மற்றும் ஆலயத்தின் திருவுருவச்சிலை இருந்த இடங்கள் சேதமாக்கப்பட்டிருந்தன.
சமீபகாலமாக மலையகத்தின் பாரம்பரிய சமய கலாசார இடங்கள் அளிக்கப்பட்டு வருகின்றது நமது மலையகம் மக்களின் சமய கலாசார உரிமைகளை பாதுகாக்க இந்து கலாசார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், எல்ல ஊவாகிரீன்லாந்து தோட்டத்தில் சின்ன சிவனொளிபாத மலைத்தொடரில் தோட்டத்தில் அமையப்பெற்றிருக்கும் 100 வருடங்களுக்கு மேல் பழமையான சென்டர் கட்டி முருகன் ஆலயம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆலயத்தை சேதம் ஆகிய அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றன. (படங்களும் தகவலும், ஆர். சுரேஸ்குமார்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago