R.Maheshwary / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ், துவாரக்ஷன்
கொட்டகலை பிரதேச சபையின் 2022 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் 14 விருப்பு வாக்குகளால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
தவிசாளர் ராஜமணி பிரசாந் சமர்பித்த 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்துக்கு, சபைக்கு சமூகமளித்த 16 உறுப்பினர்களில் 14 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 1 உறுப்பினர் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான பி.ரவிச்சந்திரன், கே.கல்யாணகுமார்,எஸ்.லெட்சுமணன், பி.நாகேந்திரன், எம்.அஞ்சலாதேவி, கே.கலாவதி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்த எஸ்.ராஜா எதிர்த்து வாக்களித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .