Janu / 2026 மே 14 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ, கர்க்கஸ்வோல்ட் (Kirkoswald) தோட்டத்தில் வியாழக்கிழமை (14) அன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதில் காயமடைந்த ஐந்து பெண்கள் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
" பொகவந்தலாவ, கர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் வியாழக்கிழமை (14) அன்று தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த ஐந்து பெண்கள் சிகிச்சைக்காகப் பகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்துப் பகவந்தலாவை பிரதேச வைத்தியசாலை அதிகாரி ஒருவர் கூறுகையில், குளவித் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பெண்களின் நிலைமையும் பாரதூரமானதாக இல்லை எனவும், அவர்கள் தற்போது தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago