R.Maheshwary / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பூண்டுலோயா- வெவஹேன கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் 2ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது நண்பர்கள் ஐவருடன், வெவஹேன பகுதியில் நீராட சென்ற வேளையிலேயே கால் தவறி குறித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போனவர், பூண்டுலோயா கும்பாலொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 34 வயதுடைய இலங்க சஞ்சீவ என தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடி, பூண்டுலோயா பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரம் இணைந்து மூன்றாவது நாளாக இன்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .