எம். செல்வராஜா / 2020 மார்ச் 03 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (03) உத்தரவிட்டார்.
இரவு, ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கொன்ஸ்டபிள், பெரகலை எனும் இடத்தில் வைத்து, தாக்கப்பட்டுள்ளார். தாக்கப்பட்ட அவர், ஹல்துமுல்லை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், கொன்ஸ்டபிளைத் தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில், பெரகலையைச் சேர்ந்த ஏ. முரளி என்பவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரே தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025